கோலாலம்பூர், ஜன.25-
மக்கள் சக்தியை அரசாங்கம் குறைத்த மதிப்பிடக் கூடாது என்று முன்னாள் சட்டத்துறை துணை அமைச்சர் ஹனிப்பா மைடின் கேட்டுக்கொண்டார்.
லஞ்சத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கியுள்ள பிரச்சாரம் மற்றும் இயக்கம் ஒரு தொடக்கமாகும்.
மாணவர்கள் கிளந்தெழும் நிலை ஏற்படாமல் இருக்க அவர்களின் போராட்டத்திற்கும், உணர்வுக்கும் அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்று அந்த முன்னாள் துணை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.