கோலாலம்பூர், ஜன.25-
வரும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு ETS ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 168 டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் கிழக்கு கரை மாநிலங்களுக்கான 43 ஆயிரத்து 210 ரயில் டிக்கெட்டுகளில் இதுவரையில் 33 ஆயிரத்து 831 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.