Op Tunggak: அந்நிய ஓட்டுனர்களின் நான்கு லட்சம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட நிலுவை சம்மன்கள்

கோத்தா பாரு, ஜன.26-

கடந்த ஜனவரி 1 முதல் தொடங்கப்பட்ட “Op Tunggak” சோதனையின் மூலம், தாய்லாந்தைச் சேர்ந்த 163 வாகனங்களுடன் 182 வெளிநாட்டு ஓட்டுநர்கள் நிலுவையில் உள்ள சம்மன்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 4 இலட்சத்து 25 ஆயிரத்து 104 இங்கிட் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச குற்றங்கள் ICP எனப்படும் அனைத்துலக சுழற்சி அனுமதியை தவறாகப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. 16 தாய்லாந்து வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பட்லி ரம்லி.

பெர்லிஸில் தடுத்து வைக்கப்பட்ட ஒரு வேனின் உரிமையாளர் மூன்று ஆண்டுகளில் 85 சம்மன்களைப் பெற்றிருந்தார், பின்னர் 25 ஆயிரத்து 500 ரிங்கிட் செலுத்தி அவற்றை தீர்த்து வைத்தார். தாய்லாந்து வாகனங்கள் நாட்டின் சட்டங்களை மீறுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளிநாட்டு ஓட்டுநர்கள் ICP அனுமதியை தவறாக பயன்படுத்துவதையும், பயணிகளை ஏற்றுவதையும் JPJ கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS