கோலாலம்பூர், ஜன.26-
நில உரிமை மோசடி கும்பலில் வழக்கறிஞர்கள் போன்ற நிபுணர்களின் தலையீடு இருக்க வாய்ப்புள்ளது என்று புக்கிட் அமான் வணிக குற்ற புலனாய்வுத் துறையின் டத்தோஶ்ரீ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்துள்ளார். இதுபோன்ற மோசடிகளில் உள்புற வெளிப்புற நபர்களின் கூட்டுச் சதி இருக்கக்கூடும் என்றும், தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மோசடியை மேலும் விரிவாக விசாரிக்க உள் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.