இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 7 பத்ம விபூஷண், 19 பத்ம பூஷண் மற்றும் 113 பத்ம ஸ்ரீ என மொத்தம் 139 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலைத்துறையில் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. கலைத்துறையில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரித்து அவருக்கு அவ்விருது அளிக்கப்படுகிறது. கோலிவுட் நடிகர்களில் பத்மபூஷண் விருதைப் பெறும் ஐந்தாவது நடிகர் அஜித்குமார்.

அஜித்குமாருக்கு முன் ஐந்து நடிகர்கள் அந்த கௌரவ விருதைப் பெற்றுள்ளனர். மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், மறைந்த நடிகர் விஜயகாந்த் ஆகியோரே அந்த நடிகர்கள்.
இவ்வேளையில் நடிகை சோபனாவுக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது.