புத்ராஜெயா, ஜன.27-
நெல் விதைகளின் விலையை உயர்த்தவும், தரமான நெல் விதைகளை உறுதி செய்யவும் கோரி, அதிகமான விவசாயிகள் இன்று காலையில் புத்ராஜெயாவில் விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் முன்திரண்டனர்.
இந்தோனேசிய அதிபர் Prabowo Subianto-வின் வருகையையொட்டி, புத்ராஜெயா முன் திரள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டும், அதனை பொருட்படுத்தாமல் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிகளவில் திரண்டனர்.
7 பேருந்துகள் மற்றும் கார்களிலிருந்து நெற்களஞ்சியங்களான கெடா, பெர்லிஸ், பினாங்கு, பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு சுலோகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்தனர்.
நெல் விதைகள் ஆயிரத்து 800 ரிங்கிட்டாக உயர்த்துவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் ஆவன செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.