அலோர் ஸ்டார், ஜன.27-
அலோர் ஸ்டார், தொங்காங் யார்ட் பகுதியில் ஒரு வீட்டில் தீவைக்கப்பட்டு, முதியவரும் அவரின் மகனும் கருகி மாண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐவருக்கு எதிரான தடுப்புக்காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த ஐவரும், அலோர்ஸ்டார் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சித்தி நோர் ஹஸ்லிசா முன்னிலையில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.
19 க்கும் 53 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து சந்தேகப் பேர்வழிகள், 61 வயது தந்தையும், 23 வயது முகனும் தீயில் கருகி மாண்ட சம்பவத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ பிசோல் தெரிவித்தார்.
பிடிபட்டுள்ள ஐவரில் மூவர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளனர். இதர இருவர் ஏற்கனவே குற்றப்பதிவுகளை கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.