பினாங்கு போலீஸ் தலைவருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு

பினாங்கு, ஜன.27-

வரும் பிப்வரி 11 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் பினாங்கு தைப்பூச விழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும், விழா சுமூகமாக நடைபெறுவதற்கும் ஏதுவாக பினாங்கு இந்து அறப்பணி வாரியப் பொறுப்பாளர்கள், பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மட்டுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடத்தினர்.

பினாங்கில் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய உற்சவ விழாவான தைப்பூச விழாவில் கிட்டத்தட்ட ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான பக்தர்களும் பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கு RSN ராயர் தலைமையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் பொறுப்பாளர்கள் டத்தோ ஹம்சாவையும், உயர் போலீஸ் அதிகாரிகளையும் சந்தித்தனர்.

அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன், ஆணையர் டத்தோ J. தினகரன் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கூட்ட நெரிசலை கண்காணித்தல், அனுசரிக்கப்பட வேண்டிய ஒழுங்கு முறைகள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்தல், பொது ஒழுங்கு முறையை பேணுதல் உட்பட பல தரப்பட்ட விவகாரங்களும் இரு தரப்பிலும் பேசப்பட்டு விவாதிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS