கோலாலம்பூர்,ஜன.27-
மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ள இந்தோனேசிய அதிபர் Prabowo Subianto-வுக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஜோகூர் மாநிலத்தின் முதல் நிலை அரச உயரிய விருதை வழங்கி கெளரவித்தார்.
இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற சந்திப்பின் போது, இந்தோனேசிய அதிபருக்கு இந்த உயரிய விருதை மாமன்னர் வழங்கி சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் பி ரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்டார்.
Prabowo Subianto, தமக்கு பால்ய நண்பர் ஆவார். கடந்த 1980 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இராணுவப் பயிற்சி மேற்கொண்ட போது தமக்கு Prabowo Subianto அறிமுகமானார் என்று சுல்தான் இப்ராஹிம் தமது முகநூல் பதிவேற்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.