பாங்காக், ஜன.27-
தாய்லாந்து குடிநுழைவுத்துறை மே 1 முதல் வெளிநாட்டு பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தும் அனைத்து சுற்றுப் பயணிகளுக்கும் டிஜிட்டல் வருகை அட்டைகளை அமல்படுத்தும்.
தாய்லாந்திலிருந்து விமானம், தரை மற்றும் கடல் மார்க்கமாக வருபவர்கள் மற்றும் புறப்படுபவர்கள், விசா விலக்கு பெற்ற நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் உட்பட, TM6 படிவம் எனப்படும் அட்டையை ஆன்லைனில் நிரப்ப வேண்டும். டிஜிட்டல் படிவத்திற்கு கட்டணம் இல்லை, இது தற்போது நிறுத்தப்பட்டுள்ள காகித படிவத்திற்கு மாற்றானதாகும்.
டிஜிட்டல் TM6 படிவத்திற்கு பாஸ்போர்ட் விவரங்கள் மற்றும் தாய்லாந்தில் உள்ள முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட மற்றும் பயணத் தகவல்கள் தேவை என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
தாய்லாந்து கடவுச்சீட்டு உள்ளவர்களுக்கு மட்டும் TM6 படிவத்தை நிரப்புவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தாய்லாந்தின் சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
TM6 டிஜிட்டல் படிவத்தைப் பயன்படுத்துவது, தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.