கோலாலம்பூர், ஜன.27-
கடந்த 2009 ஆம் ஆண்டில் மலேசிய ஊழல் தடுப்பு அணையத்தின் தடுப்புக்காவலில் இருந்த போது மரணம் அடைந்த அரசியல் உதவியாளர் Teoh Beng Hock வழக்கில் அனைத்து சாட்சிகளிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
Teoh Beng Hock மரணம் தொடர்பில் அனைத்து அம்சங்களிலும் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு ஏற்ப அனைத்து சாட்சிகளும் மீண்டும் அழைக்கப்படுவர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் Datuk Seri Mohd Shuhaily Mohd Zain தெரிவித்துள்ளார்.
சீனப்புத்தாண்டுக்கு பிறகு இந்த விசாரணை நடைபெறும் அதேவேளையில் யார் யாரிடம் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை போலீஸ் தரப்பு தீர்மானிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.