கோலாலம்பூர், ஜன.28-
நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சீராக உள்ளது. சீனப்புத்தாண்டையொட்டி பிரதான நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலையில் எவ்வித இடையூறின்றி வாகனங்களின் போக்குவரத்து சீராக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM கூறுகிறது.
கிழக்குக்கரை நெடுஞ்சாலையில் விபத்து காரணமாக வாகனங்களின் போக்குவரத்து மெதுவாக இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
காலை 10.15 மணி நிலரப்படி கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையில் 43.4 கிலோமீட்டரில் கெந்திங் செம்பாவில் இருந்து புகிட் திங்கி வரை மற்றும் பெந்தோங்கிலிருந்து காராக் நெடுஞ்சாலையின் 61.4 ஆவது கிலோ மீட்டரில் விபத்து காரணமாக வாகனங்களின் நகர்ச்சி மெதுவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
வடக்கு தெற்கு PLUS நெடுஞ்சாலையின் 25.1 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர் சினாய் உத்தாரா – கூலாயில் விபத்து காரணமாக வாகனங்கள் மெதுவாக நகர்வதாக LLM அறிவித்துள்ளது.