சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்புகள்

சுங்கை பூலோ, ஜன.28-

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ R. ரமணனை நாடாளுமன்ற உறுப்பினராக கொண்டுள்ள சுங்கைப்பூலோ தொகுதியில் சீனப்புத்தாண்டை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சீனப்புத்தாண்டு அன்பளிப்பு கூடைகள் வழங்கப்பட்டன.

இந்தப் புத்தாண்டில் வசதி குறைந்த மூத்த குடிமக்களும் மகிழ்ச்சியாகவும், குதூகலமாகவும் சீனப்புத்தாண்டை வரவேற்கும் வகையில் அவர்களுக்கு அன்பளிப்புகளுடன் மண்டரின் ஆரஞ்சுப்பழங்களையும் டத்தோஸ்ரீ ரமணன் வழங்கினார்.

இது போன்ற பண்டிகளைக் காலங்களில் மட்டுமின்றி எல்லா காலக்கட்டங்களிலும் தொகுதி மக்கள் தங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு உதவிகள் நல்கப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS