சரவாக், ஜன.29-
சரவாக், கூச்சிங், Miri, Kampung Lereng Bukit என்ற இடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தில் மேலும் இரண்டு சிறார்களின் உடல்களை, இடிப்பாடுகள் மத்தியில் மீட்டனர்.
அதிகாலை 2.58 மணியளவில் நிகழ்ந்த நிலச்சரிவில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இத்துடன் நான்கு பேராக உறுதி செய்யப்பட்டது.
மூன்றாவது சடலம் இன்று காலை 11.38 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது. அடுத்த பத்து நிமிடத்தில் மற்றொரு சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக சரவாக் தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.