ஜப்பானில் காணாமல் போன மலேசிய மாணவி கண்டு பிடிக்கப்பட்டார்

ஹிரோஷிமா, ஜன.30-

ஜப்பானில் ஹிரோஷிமாவில் பயின்று வரும் மலேசிய மாணவி கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த 21 வயதுடைய மாணவி இன்று காலையில் தோக்கியோவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

தங்கள் மகள் நுரின் ஹன்னாபி ஹபிசி பாதுகாப்பாக உள்ளார் என்று ஜப்பானில் உள்ள மலேசிய தூதரகத்தின் மூலம் தங்களுக்கு தகவல் அனுப்பட்டுள்ளதாக அந்த மாணவின் தந்தை நூர் அப்சான் அப்துல் ரசாக் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை கைப்பை, பணப்பை மற்றும் கடப்பிதழுடன் வெளியே சென்ற அந்த மாணவி பின்னர் தாம் தங்கியிருந்த பல்கலைக்கழக தங்கும் விடுதிக்கு திரும்பவில்லை என்று ஜப்பானில் உள்ள மலேசிய மாணவர் சங்கம் தெரிவித்திருந்தது.

WATCH OUR LATEST NEWS