விபத்தில் சிக்கிய நபரிடம் போதைப்பொருள்

தங்கா பத்து, ஜன.30-

மலாக்கா, தங்கா பத்து, பாயா லுபோவில் பாலர் பள்ளி ஒன்றின் வேலியை மோதித்தள்ளிய நபர், போதைப்பொருள் கொண்டு சென்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று மலாக்கா தெஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டோபர் பாதிட் தெரிவித்தார்.

நேற்று இரவு 11.39 மணியளவில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் அழைப்பைப் பெற்றனர். காரில் சிக்கிக் கொண்ட அந்த நபர், மீட்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டார். அப்போது 56 வயதுடைய அந்த நபர், போதைப்பொருள் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக ஏசிபி கிரிஸ்டோபர் குறிப்பிட்டார்.

தனது ஜீன்ஸ் காற்சட்டையில் 15.46 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை அவர் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி கிரிஸ்டோபர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS