நாட்டின் சில முக்கிய எல்லை வாயில்களில் பாதுகாப்பைவிரிவுபடுத்தப்படும்

பிப்ரவரி, 02-

AKPS எனப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு – பாதுகாப்பு ஏஜென்சி பினாங்கு , கோத்தா கினபாலு உட்பட நாட்டின் சில முக்கிய எல்லை வாயில்களில் பாதுகாப்பைவிரிவுபடுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்துள்ளார். தற்போது இந்த ஏஜென்சி நாட்டின் 19 எல்லை நுழைவாயில்களில் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 141 முக்கிய நுழைவு வாயில்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

AKPS அமலாக்கத்திற்காக தரை எல்லைகள், அனைத்துலக விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 141 முக்கிய நுழைவாயில்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அரச மலேசியக் காவல் துறை, அரச மலேசிய சுங்கத் துறை, மலேசிய குடிநுழைவுத் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் AKPS இல் ஈடுபடுத்தப்படுவார்கள் என Saifuddin மேலும் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS