பிப்ரவரி, 02-
தும்பாட் Sri Tujuh கடற்கரை அருகே 61 மில்லிமீட்டர் அளவிலான ஒரு பழைய மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 26 வயது இளைஞர் ஒருவர் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, பழைய டயரில் சிக்கியிருந்த குண்டு போன்ற ஒரு பொருளைக் கண்டுபிடித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்ததாக தும்பாட் மாவட்டக் காவல் துறைத் தலைவர் Mohd Khairi Shafie தெரிவித்தார்.
விசாரணையில் கிடைக்கப்பெற்ற அந்த குண்டு ஒரு வகை மோட்டார் குண்டு என்றும், அது நீண்ட காலமாக துருப்பிடித்த நிலையில் இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக வெடிகுண்டு அழிப்பு பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குண்டை அங்கேயே பாதுகாப்பாக அழித்தனர்.