பாங்கி, பிப்.3-
மலேசிய குடிமைத் தற்காப்புப் படையான APM, அதன் பயிற்சி திறனை மேம்படுத்துவதற்காக, ஜூன் மாதத்திற்குள் 1,000 புதிய பயிற்சியாளர்களைப் பயிற்றுவிக்க இலக்கு வைத்துள்ளது. APMஇன் தலைமை ஆணையர் டத்தோ அமினுரஹிம் முகமட் கூறுகையில், பயிற்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஒன்றரை இலட்சம் பொது மக்களுக்கு குடிமைத் தற்காப்பு பற்றிய அடிப்படை அறிவைப் பயிற்றுவிக்க உதவும். இந்த இலக்கை அடைய, APM க்கு அதிக பயிற்சி பெற்ற , திறமையான பயிற்சியாளர்கள் தேவை. ஏனெனில் தற்போதைய சூழலில் ஆண்டுக்கு 33 ஆயிரம் பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க முடியும் என்றார்.
பயிற்சியாளர்களைச் சேர்ப்பது நாட்டின் குடிமைத் தற்காப்பு சூழலை மேம்படுத்துவதற்கும், நமது சமூகம் பேரழிவு அபாயங்கள் அல்லது அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதிச் செய்வதற்கும் ஒரு விரைவான வழியாகும் என்று அவர் கூறினார்.