அரசு நிர்வாகத்தை விரைவுபடுத்தும் முயற்சி: இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

கோலாலம்பூர், பிப்.3-

இலக்கவியல் மயமாக்கலுக்கு ஏற்ப அரசு நிர்வாகத்தை விரைவுபடுத்தும் முயற்சியில், அரசு ஊழியர்களை இந்தியாவுக்கு அனுப்பி ஆறு மாத கால செயற்கை நுண்ணறிவு AI பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அரசு தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ ஷம்சுல் பஸ்ரி அபு பகார் தெரிவித்தார். ஏற்கனவே முதல் குழு பயிற்சி முடித்து திரும்பியுள்ள நிலையில், இரண்டாவது குழுவும் அனுப்பப்பட்டுள்ளது. இஃது அரசு சேவைகளை இலக்கவியல் மயமாக்கும் தொடர்ச்சியான செயல்முறையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தனது உரையில், அரசு சேவைகள் அதிக திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இலக்கவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இலக்கவியல் உள்கட்டமைப்பு, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், இணையப் பாதுகாப்பை மேம்படுத்துதல் , அண்மைய – புதியத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS