தாதியர் கல்விக்கான டிப்ளோமா நுழைவுத் தகுதி தளர்த்தப்பட்டுள்ளது

பெட்டாலிங் ஜெயா, பிப்.3-

தாதியர் கல்விக்கான டிப்ளோமா நுழைவுத் தகுதியைத் தளர்த்தியுள்ளது மலேசிய சுகாதார அமைச்சு. முன்பு SPM தேர்வில் ஐந்து CREDIT தேவைப்பட்ட நிலையில், தற்போது மூன்று CREDIT போதுமானது. மலாய் மொழி, கணிதம், அறிவியல் ஆகியப் பாடங்களில் CREDIT பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் உட்பட இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தளர்வு இந்த ஆண்டு மாணவர்களுக்கும் 2026 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே. நாட்டில் செவிலியர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட்.

தாதியர் பற்றாக்குறை காரணமாக சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, அதிக மாணவர்களைத் தாதியர் படிப்பில் சேர ஊக்குவிக்கும் வகையில் நுழைவுத் தகுதி தளர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தளர்வு தற்காலிகமானது . எதிர்காலத்தில் மறுபரிசீலனை செய்யப்படும். மலேசிய மருத்துவ மன்றத்தின் அறிக்கையின்படி, தாதியர் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

WATCH OUR LATEST NEWS