தைப்பிங், பிப்.3-
தைப்பிங் சிறைச்சாலையில் கைதிகள் மத்தியில் ஏற்பட்ட கைகலப்பில் ஒரு கைதி கடுமையாகத் தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் ஒரு சுயேட்சை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
சுயேட்சை குழுவினரால் மேற்கொள்ளப்படும் இந்த விசாரணையின் முடிவு, பொதுவில் அறிவிக்கப்பட வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் முகமட் எஸ்ரி அப்துல் வாஹாப் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கைகலப்பில் கிட்டத்தட்ட 100 கைதிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. காரணம், மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதிக்கும் 17 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாளில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.