பட்டர்வொர்த், பிப்.3-
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பட்டர்வொர்த், பங்சாபூரி, செரி ஒர்கிட் அடுக்குமாடி வீடொன்றில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு காதல் ஜோடியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலைக்கு பிறகு தலைமறைவாகிவிட்ட அந்த மூதாட்டியின் 20 வயது மதிக்கத்தக்க மகன் குறித்து கிடைக்கப் பெற்ற உளவுத்துறைத் தகவலைத் தொடர்ந்து அந்த ஆடவரும், அவரின் காதலியும் இன்று காலை 6.30 மணியளவில் பாயா துருபோங்கில் ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டர்.
விசாரணைக்கு ஏதுவாக அவ்விருவரையும் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை தடுப்புக்காவில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமட் தெரிவித்தார்.