கோலாலம்பூர், பிப்.3-
வரும் ஜுலை மாதத்துடன் 100 வயதை எட்டும் துன் மகாதீர், தனது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் வீட்டிற்கு வெளியே பந்தை தூக்கி எறிந்து, விளையாடிக் கொண்டு இருந்த காட்சி குறித்த காணொளி, வலைவாசிகள் மத்தியில் பெரும் கவன ஈர்ப்பாக மாறியது.
59 விநாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியை வலைவாசிகள் அதிகளவில் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். சித்தி ஹஸ்மாவும் துன் மகாதீரும் விளையாடிக் கொண்டு இருந்த போது அவர்களுடன் இருந்த இருவர் அந்த காட்சியை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.