கோலாலம்பூர், பிப்.3-
மருத்துவக் காப்புறுதி கட்டண பிரமியத் தொகையை உயர்த்துவது, பொது சுகாதார முறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கெராக்கான் கட்சித் தலைவர் டத்தோ டோமினிக் லாவ் நினைவுறுத்தியுள்ளார்.
மருத்துவமனைகளில் போதுமான சாதனங்கள் மற்றும் ஆள் பல வசதிகள் இல்லாததால் நோயாளிகள் 15 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதன் தொடர்பில் ஒரு விரிவான நடவடிக்கைத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
காப்புறுதி மருத்துவக் கட்டண பிரமியத் தொகை உயர்த்தப்படுவதைத் தடுக்க, நாட்டின் பொது சுகாதார முறைக்கு அதிக முன்னுரிமையும், அழுத்தத்தையையும் கொடுக்குமாறு அரசாங்கத்தை டத்தோ டொமினிக் லாவ் கேட்டுக்கொண்டார்.