குரோஷியா, பிப்.4
உலகக் கிண்ண உள்ளரங்கு ஹாக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மலேசியா தோல்வி கண்டது. B பிரிவுக்கான தொடக்க ஆட்டதில் ஜெர்மனியைச் சந்தித்த மலேசியா அந்த மூன்று முறை உலக வெற்றியாளரிடம் 4-12 என வீழ்ந்தது. உலகக் கிண்ண உள்ளரங்கு ஹாக்கி போட்டி குரோஷியாவில் நடைபெறுகிறது.
தொடக்கத்தில் ஜெர்மனிக்கு ஈடு கொடுத்து விளையாடிய மலேசியா, அதன் பிறகு புள்ளிகளை ஈட்டக் கடுமையாகப் போராடியது. இறுதில் ஜெர்மனி வெற்றி பெற்றது.
மற்றோர் ஆட்டத்தில் ஈரான், அர்ஜெண்டினாவை 5க்கு 3 எனத் தோற்கடித்தது. மலேசியா அடுத்த ஆட்டத்தில் அர்ஜெண்டினாவையும் அதன் பிறகு ஈரானையும் சந்திக்கவிருக்கிறது.