செகின்சான், பிப்.4-
ஜாலான் கிள்ளான் – தெலுக் இந்தான் சாலையின் 70 ஆவது கிலோமீட்டரில் செகின்சான், கம்போங் சுங்கை லாமாஸ் அருகில் நிகழ்ந்த விபத்தொன்றில் 62 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை 4 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் Toyota Hilux வாகனம், Ford Ranger வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்டன. இதில் Toyota Hilux வாகனத்தில் பயணம் செய்த முதியவர், விபத்து நடந்த அடுத்த கணமே தனது வாகனத்தின் வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளார்.
கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த முதியவர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ரோபின் குஹா தகுர்தா தெரிவித்தார்.