ஷா ஆலாம், பிப்.4-
ஆள் மாறாட்டம் செய்து நான்கு மாநிலங்களில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.
31 வயதுடைய அந்த நபர், சிலாங்கூருக்கு அடுத்து கெடா, நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூரில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
சாலை போக்குவரத்து இலாகா மற்றும் சுங்கத்துறை ஆகியவற்றினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை குறைந்த விலையில் ஏலத்தின் எடுத்து தருவதாக கூறி, அந்த நபர் பண மோசடி செய்துள்ளார் என்று டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.