7 வயது மகனை கழிப்பறையில் பூட்டி வைத்த தந்தைக்கும், அவரின் காதலிக்கும் அபராதம்

ஜோகூர் பாரு. பிப்.4-

தனது 7 வயது மகனை கழிப்பறைக்குள் பூட்டி, வெறும் ரொட்டித்துண்டையும், குழாய் நீரையும் ஆகாரமாக கொடுத்து, ஒவ்வொரு நாளும் கவனிப்பாற்ற நிலையில் கைவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட தந்தைக்கும், அவரின் காதலிக்கும் ஜோகூர்பாரு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 17 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

அத்துடன் அந்த தம்பதியர், 440 மணி நேரத்திற்கு சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்று நீதிபதி Thalha Bachok Embk Mok தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

39 வயது ஆர். தயாளன் மற்றும் அவரின் காதலியான 41 வயது கே. மகேஸ்வரி ஆகிய இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஜோகூர்பாரு, தாமான் பூலாய் ஜெயாவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முறையான உணவு, ஊட்டச்சத்துயின்றி பலவீனமாக காணப்பட்ட அந்த சிறுவன், தன்னார்வலர்கள் மூலம் அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டான்.

சிறுவனை முறையாக கவனிக்காமல் அலட்சிப்படுத்தி வந்ததாக அந்த தம்பதியர், 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

WATCH OUR LATEST NEWS