கோலாலம்பூர், பிப்.4-
தொடக்கப்பள்ளிகளிலும், இடைநிலைப்பள்ளிகளிலும் பாதியிலேயே பள்ளியை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் பெருவாரியாக குறைந்துள்ளது என்று கல்வி துணை அமைச்சர் வொங் கா வோ தெரிவித்துள்ளார்.
பள்ளியை விட்டு பாதியிலேயே விலகும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு 21 ஆயிரத்து 748 மாணவர்களாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 13 ஆயிரத்து ஏழு பேராக குறைந்துள்ளது என்று இன்று நாடாமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது வொங் கா வோ குறிப்பிட்டார்.