கோலாலம்பூர், பிப்.4-
PLKN எனப்படும் தேசிய சேவை பயிற்சித்திட்டத்தில் இதற்கு முன்பு அமல்படுத்தப்பட்ட இரண்டு பயிற்சித் திட்டங்களைக் காட்டிலும் PLKN 3.0 பயிற்சித் திட்டத்தின் செலவினம் மிக குறைவாகும் என்று தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்தார். PLKN 3.0 திட்டத்திற்கு பயிற்சியாளர் ஒருவருக்கு சராசரி 2 ஆயிரம் வெள்ளி செலவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
PLKN 1.0 க்கு 71 ஆயிரத்து 300 பயிற்சியாளர்களுக்கு மொத்தம் 565 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டது. PLKN 2.0 க்கு 20 ஆயிரம் பயிற்சியாளர்களுக்கு 361 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ள வேளையில் தற்போது அமல்படுத்தப்படவிருக்கும் PLKN 3.0 திட்டத்ததிற்கு ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் நிலையில் 200 மில்லியன் செலவிடப்படவிருப்பதாக காலிட் நோர்டின் குறிப்பிட்டார்.