சபாக் பெர்ணம், பிப்.4-
முக்கியப் பண்டிகைக் காலங்களில் பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் . இந்த நடைமுறை இவ்வாண்டு முதல் அ மல்படுத்தப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அலேக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
இதற்கு முன்பு அமல்படுத்தப்பட்ட பண்டிகைக் காலங்களில் இரண்டு தினங்களுக்கு டோல் கட்டணம் இலவச நடைமுறை இனி அமல்படுத்தப்படாது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நடைமுறையினால் மிகப்பெரிய செலவினத்தை அரசாங்கம் ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முன்பு அமல்படுத்தப்பட்ட நடைமுறையைப் போல ஆண்டுக்கு எட்டு நாட்களுக்கு இலவச டோல் கட்டணமின்றி 50 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.