கோலாலம்பூர், பிப்.5-
அரசாணை உத்தரவு தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தொடுத்துள்ள வழக்கை விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தில் சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.
அரசாணை உத்தரவு தொடர்பில் நஜீப் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கும், அப்பீல் நீதிமன்றத்தற்கு இடையில் சட்ட ரீதியான வியாக்கியானங்களில் முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகள் அடிப்படையில் அப்பீல் நீதிமன்றம் அளித்த அனுமதி குறித்து கூட்டரசு நீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகம் தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது.