வாகனங்கள் மோதல், மாது மரணம், இரு பிள்ளைகள் காயம்

கோத்தா திங்கி, பிப்.5-

ஜோகூர், கோத்தா திங்கி, தாமான் ஶ்ரீ சௌஜானா சமிக்ஞை விளக்குப்பகுதியில் 4 Wheel Drive வாகனம் ஒன்று, டிரெய்லர் லோரியுடன் எதிரும் புதிருமாக மோதியதில் மாது ஒருவர் மரணமுற்றார். அவரின் இரு பிள்ளைகள் காயமுற்றனர்.

இச்சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்தது. Toyota Hilux ரகத்திலான அந்த 4 Wheel Drive வாகனத்தில் ஐவர் பயணம் செய்தனர். 51 வயது ஜெலாம்பாய் அனாக் ரிரிங் என்ற மாது கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரின் வயது குறைந்த இரு பிள்ளைகளான கேரோலினா சிந்தியா மற்றும் பிராங்கிளின் சேவியர் ஆகியோர் காயங்களுக்கு ஆளானதாக அடையாளம் கூறப்பட்டது.

அந்த மாதுவின் 7 மற்றும் 26 வயதுடைய இதர இரு பிள்ளைகள் காயம் அடையவில்லை என்று தீயணைப்பு மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS