கோலாலம்பூர், பிப்.5-
இணையத் தொடர்பு ஆற்றல், குறைவாக உள்ள பகுதிகளில், MOCN எனப்படும் Multiple Operator Core Network தொழில்நுட்பத்தின் மூலம் 4G தொடர்பு எல்லையை அதிகரித்து, நிலைத்தன்மையை சீர்படுத்துவதில் தொடர்புத்துறை அமைச்சு கவனம் செலுத்தும் என்று அதன் துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதிகளில் 4Gயின் தொடர்பு வசதிகளின் எல்லை, சரசாரி 97 விழுக்காட்டிற்கும் கூடுதலாக நிறைவு செய்யப்பட்ட போதிலும் ஒவ்வொரு தொடர்புத்துறை நிறுவனத்தின் கவரெஜ் தொடர்பு எல்லையின் விழுக்காடு, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுப்பட்டு உள்ளது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தியோ நீ சிங் இதனை தெரிவித்தார்.
4G கவரெஜ் எல்லையை உள்ளடக்கிய தொடர்புத்துறை நிறுவனமான Celcom, 94 விழுக்காட்டை எட்டிப்பிடித்துள்ளது. அதேவேளையில் மற்றொரு தொடர்புத்துறை நிறுவனமான Digi 95 விழுக்காட்டையும், Maxis 98 விழுக்காட்டையும், U- Mobile 82 விழுக்காட்டையும், TM எனப்படும் Telekom Malaysia 80 விழுக்காட்டையும் நிறைவு செய்து இருப்பதாக சுங்கைப்பட்டாணி எம்.பி. டாக்டர் முகமட் தௌபிக் ஜோஹாரி கேள்விக்கு தியோ நீ சிங் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.