சிப்பாங், பிப்.5-
மோட்டோஜிபி உலக சாம்பியனான ஜார்ஜ் மார்ட்டின், மலேசியாவில் பருவத்திற்கு முந்தைய சோதனையின் முதல் நாளில் விபத்தில் சிக்கியதால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பிரமாக் டுகாட்டியுடன் 2024 சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு அந்த 27 வயது ஓட்டுனர் ஏப்ரிலியாவுக்குச் சென்றார். சிப்பாங் பந்தயத்தளத்தில் இரண்டாவது வளைவில் விபத்துக்குள்ளான பிறகு இடது கால் மற்றும் வலது கையில் வலிப்பதாக அவர் கூறியிருந்தார்.
மார்ட்டின் தனது புதிய இயந்திரத்தின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான போது 13 சுற்றுகளை முடித்திருந்தார்.
இடது காலில் சற்று பலமாகக் காயமுற்ற அவர் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.