ஜகார்த்தா, பிப்.5-
இந்தோனேசியா, மேற்கு ஜாவாவில் Ciawi டோல் சாவடியில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் குறைந்தது எண்மர் மரணமடைந்தனர். 11 பேர் காயத்திற்கு இலக்காகினர்.கனிமவள நீர் பாட்டில்களை ஏற்றுயிருந்த லாரி, டோல் கட்டுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த சில வாகனங்களை மோதியது.
ஜகார்த்தா நோக்கிச் செல்லும் சாலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. பிரேக் கோளாறு காரணமாக அந்த லாரி பிற வாகனங்களை மோதியிருக்கலாம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போக்குவரத்து காவல் துறை கூறியது.
அந்த லாரி டோல் சாவடியில் நின்று கொண்டிருந்த போது முன்னே இருந்த ஆறு வாகனங்களை மோதியது. அவற்றில் மூன்று வாகனங்கள் தீப்பற்றிக் கொண்டன. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் Ciawi மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அவ்விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.