குவாந்தான், பிப்.5-
நேற்று செவ்வாய்க்கிழமை குவாந்தான், புகிட் செகிலாயில் கடை வளாகம் ஒன்றில் குளிரூட்டி விற்பனையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 வயதுடைய அந்த நபர், அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் அதே இடத்தில் கைது செய்யப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் சஹாரி வான் புசு தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபரை வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.