ஜார்ஜ்டவுன், பிப்.5-
பினாங்கு, ஜார்ஜ்டவுன், Persiaran Gurney-யில் உள்ள ஒரு பேரங்காடியின் ஏழாவது மாடியிலிருந்து கீழே விழுந்து, வெளிநாட்டு சுற்றுப்பயணி ஒருவர் படுகாயத்திற்கு ஆளானார்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.54 மணியளவில் நிகழ்ந்தது.
25 வயதுடைய அந்த சுற்றுப்பயணி, அந்த பேரங்காடியின் கீழ் தளத்தில் சீனப்புத்தாண்டை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஓர் அலங்கார வடிவமைப்பு மீது விழுந்ததால் அவருக்கு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தீமோர் டாலவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.
அந்த சுற்றுப்பயணி தற்போது பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.