பத்துமலை தைப்பூசவிழாவில் 18 லட்சம் முதல் 20 லட்சம் பேர் திரளக்கூடும்

பத்து மலை, பிப்.5-

முருகப் பெருமானின் உற்சவத்திருநாளான இவ்வாண்டு தைப்பூச விழாவில் 18 லட்சம் முதல் 20 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையானது, பத்திரிகைகள், ஆங்கிலமொழி ஊடகங்களால் வெளியிடப்பட்ட தகவலாகும். தைப்பூச விழா கொண்டாடப்படும் பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாமல் தைப்பூச விழா முதல் நாளான பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பத்துமலைத் திருத்தலம், உருமாற்றம் கண்டு, , மிகப் பெரிய மேம்பாடுகள் நடைபெற்று இருப்பதால் இந்த முறை பத்துமலை தைப்பூச விழாவை காண்பதற்கு அதிகமான சுற்றுப்பயணிகள் வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேவஸ்தானத்திற்கு தெரியவந்துள்ளது என்று இன்று பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டான்ஸ்ரீ நடராஜா இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS