சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை வைத்திருந்தது? இராணுவ வீரர் கைது

ஈப்போ, பிப்.6-

வீடொன்றில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட வீட்டில் அந்த இராணுவ வீரர், 10 க்கும் மேற்பட்ட செயற்கைத் துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் ஈப்போ, ஜாலான் தம்புன் அருகில் கேம் சைட் பு இராணுவ முகாம் குடியிருப்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் கடுங்குற்றங்கள் தடுப்பு பிரிவான D9 இந்த சோதனை மேற்கொண்டது.

இதில் 34 வயதுடைய இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் Zulkafli Sariaat தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS