நெடுஞ்சாலைகளில் காலை நேரத்தில் கனரக வாகனங்களுக்குத் தடை

கோலாலம்பூர், பிப்.7-

கிள்ளான் பள்ளத்தாக்கில் குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் காலையிலும், மாலையிலும் வாகனப் போக்குவரத்து உச்சக்கட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படவிருக்கிறது.

இந்த தடை வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மலேசிய நெடுங்சாலை வாரியமான LLM- மின் தலைமை இயக்குநர் டத்தோ சசாலி ஹாருன் தெரிவித்தார்.

வடக்கு தெற்கு விரைவு சாலையான NSE, கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவு சாலையான NKVE, வடக்கு – தெற்கு Central Link விரைவு சாலையான ELITE ( எலிட் ) மற்றும் டூத்தா – உலு கிள்ளான் விரைவு சாலையான DUKE ( டூக் ) ஆகியவையே அந்த நெடுஞ்சாலைகளாகும் என்று அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS