சிச்சுவான், பிப்.8-
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அந்நாட்டு அரசு ஒளிபரப்பு சிசிடிவி தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 11.50 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஜின்பிங் கிராமத்தில் 10 வீடுகள் புதைந்துள்ளதாக CCTV தெரிவித்துள்ளது. நிலச்சரிவுகள் தொடர்வதால், மக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து மீட்கவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், பேரழிவின் பின்விளைவுகளைச் சரியாக நிர்வகிக்கவும் முடிந்த அனைத்தையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சு, இரண்டு பேர் மீட்கப்பட்டதாக இணையப் பதிவில் தெரிவித்தது.
உயிர் பிழைத்தவர்களை அவசர சிகிச்சை குழுக்கள் தீவிரமாக தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
பேரிடர் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக 30 மில்லியன் யுவான் ($4.1 மில்லியன்) நிதியையும் அதிகாரிகள் ஒதுக்கியுள்ளனர்.