பஹாவ், பிப்.8
நெகிரி செம்பிலான், பஹாவ்-ஜெம்புல் சாலையில் நிகழ்ந்த விபத்து காரணமாக ஆயுதத்தைப் பயன்படுத்தி, கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
21 க்கும் 43 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பத்து ஆடவர்கள், நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டனர் என்று ஜெம்புல் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹுக் தெரிவித்தார்.