கெமாமான், பிப்.8-
11 வயது சிறுமியின் பிணியைத் தீர்ப்பதாக கூறி, அவரை மானபங்கம் செய்ததாக கூறப்படும் போமோவிற்கு எதிரான தடுப்புக்காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 31 ஆம் தேதி திரெங்கானு, கெமாமானில் நடந்ததாக கூறப்படும் இந்த மானபங்கம் சம்பவம் தொடர்பில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னை போமோ என்று அடையாளம் கூறிக்கொண்டு, அந்த நபர் ஏற்கனவே பாலியல் சேட்டைகளை புரிந்து வந்துள்ளார் என்பதற்கு குற்றப்பதிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த நபர், இன்று கெமாமான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை 6 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக கெமாமான் இடைக்கால போலீஸ் தலைவர் டிஎஸ்பி வான் முகமட் வான் ஜாபார் தெரிவித்தார்.