மெக்சிகோ, பிப்.9-
மெக்சிகோவின் தென் பகுதியில் டபாஸ்கோவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி தி வெளியிட்டுள்ளன. அப்பேருந்து கான்கனில் இருந்து தபாஸ்கோ பயணித்துக் கொண்டிருந்த போது அவ்விபத்து ஏற்பட்டதாக கொமல்கால்கோவின் மேயர், ஓவிடியோ பெரால்டா தெரிவித்தார். அவ்விபத்து தொடர்பில் மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் என்ன கேட்டாலும் உதவத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சுமார் 44 பயணிகள் பேருந்தில் இருந்தனர். அவ்விபத்துக்காக மிகவும் வருந்துவதாக பேருந்து சேவை நடத்தும் நிறுவனம் ஒரு பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது. என்ன நடந்தது மற்றும் பேருதின் வேக வரம்பு சரியாக இருந்ததா என்பதை விசாரிக்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் அது கூறியது.
பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவர். அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.