ஜகார்த்தா, பிப்.9-
மேற்கு ஜாவாவின் சியாஞ்சூரில் 96 சதவிகிதம் செறிவூட்டப்பட்ட சுத்தமான மதுபானம் குடித்ததால் எட்டு பேர் இறந்தனர். நால்வர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருந்தக்கூடாத மதுபானத்தை உட்கொண்டது தெரியவந்ததுள்ளது. இது பொதுவாக கிருமிநாசினிகள் போன்ற வெளிப்புற பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
மதுபானத்தை அருந்திய நால்வர் மோசமான நிலையில் இருப்பதால் தற்போதைக்கு விசாராணை எதுவும் மேற்கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் மதுபானம் அருந்தியவர்களுக்கு நெஞ்சு வலி, தலைசுற்றல் மற்றும் குமட்டல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர், ஆனால் வெள்ளிக்கிழமை மாலை அவர்களில் ஒருவர் இறந்ததால் நிலைமை மோசமடைந்தது. சனிக்கிழமைக்குள் இறப்பு எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது.