FA கிண்ண நான்காம் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி

மான்செஸ்டர், பிப்.9-

FA கிண்ண நான்காம் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 2க்கு என்ற கோல்களில் லெஸ்டர் சிட்டியைத் தோற்கடித்தது. ஆட்டம் 1க்கு 1 என சமநிலையில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி தருவாயில் ஹார்ரி மெகுயாயர் போட்ட கோல் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு வெற்றியை ஈட்டித் தந்தது. அவர் ஆட்டத்தின் 93 ஆவது நிமிடத்தில் அந்த வெற்றி கோலை அடித்தார்.

Old Traffordட்டில் ஆட்ட பாணியில் தமது தனித்துவத்தை நிலைநாட்டப் போராடி வரும் நிர்வாகி ரூபன் அமோரிமுக்கு அவ்வெற்றி பெரும் ஆறுதலை அளித்துள்ளது. எனினும் தமதணி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அமோரி கடந்தாண்டு நவம்பரில்தான் மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார்.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் மான்செஸ்டர் யுனைடெட் தற்போது 13 ஆவது இடத்தில் இருக்கிறது.

WATCH OUR LATEST NEWS