நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமின்றி அண்மையில் தெலுங்கிலும் நுழைந்து படங்கள் நடித்து வருகிறார். ஜூனியர் என்டிஆர் உடன் ‘தேவரா’ படத்தில் அவர் நடித்து இருந்த நிலையில் அடுத்து ராம் சரண் உடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜான்வி விரைவில் தமிழில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்திற்காக ஒரு சீரிஸில் தான் ஜான்வி நடிக்க இருக்கிறார். பா.ரஞ்சித் அதைத் தயாரிக்க, சற்குணம் இயக்குகிறார்.
இந்த சீரிஸ் 2026ல் வர இருக்கிறது என்றும், படப்பிடிப்பு தொடங்க முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.