பாதுகாவல் சாவடியை மோதிய இருவர் காயம்

ஸ்கூடாய், பிப்.10

ஜோகூர், ஸ்கூடாய், தாமான் யுனிவர்சிட்டி சந்தையில் பாதுகாவல் சாவடியை காரில் மோதி சேதம் விளைவித்த இருவர் காயம் அடைந்தனர்.

நேற்று நடத்ந இந்த சம்பவம், சந்தையில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 31 வயது நபர், முத்தியாரா ரினியிலிருந்து இருந்து தாமான் யுனிவர்சிட்டியை நோக்கி சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

பிரேக் செயல்படாததால் கட்டுப்பாட்டை இழந்த கார், அந்த பாதுகாவல் சாவடியை மோதியதாதக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பல்வீர் சிங் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS